இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி பகுதியில் தீச்சட்டிப் போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று (30) வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பமாகி, காளி கோவில் வரை சென்று நிறைவடைந்தது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தை தொடர்ந்து, ஆவண நூல் வெளியீடும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான அனுஷ்டிக்கப்படும் இன்றைய நாளில் கிளிநொச்சி 155ஆம் கட்டை காளி கோயில் முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பமானது.

இதன்போது, இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கையளிக்கப்பட்ட மனுக்கள் உள்ளடங்கிய ஆவண நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தீச்சட்டிகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டக்களத்தில், ஓ எம் பி அலுவலகம் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், சர்வதேசமே நீதியை பெற்றுத்தா உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பப்பட்டிருந்தன.

இந்த நிலையில், போராட்டத்தில் சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button