உலகம்

நேபாளத்தை உலுக்கிய அசம்பாவிதம்; காணாமல்போனோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு

நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காணாமல் போனவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்களும், 54 அமெரிக்கர்களும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் அடங்குகின்றனர்.

திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை,   (26) காலை போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளம் அடித்து சென்றதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95-ஆக உயர்ந்துள்ளது.

இந்த திடீர் வெள்ளத்தால் வீதிகள், நீர்மின் திட்டங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள இராணுவம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button