உலகம்

படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!

ஸ்காட்லாந்தின் ‘கல்மேக்’ (CalMac) நிறுவனப் படகுச் சேவைகளில் ஏற்பட்ட தொடர் இயந்திரக் கோளாறுகள் மற்றும் ரத்துக்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்கும் வகையில், 10 மில்லியன் பவுண்டுகள் கொண்ட ‘Islands Resilience Fund’ திட்டத்தை ஸ்காட்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள பாறா (Barra), சவுத் யுயிஸ்ட் (South Uist) உள்ளிட்ட தீவுப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் ஜோன் ஸ்வினி (John Swinney), நடப்பு 2026/2027ம் நிதியாண்டில் முதற்கட்டமாக 3 மில்லியன் பவுண்டுகள் உடனடி உதவியாக விடுவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கப்பல் போக்குவரத்துத் தடங்கல்களால் தீவுப் பகுதி தொழில்துறையினரில் 96 சதவீதமானோர் கடுமையான நஷ்டங்களைச் சந்தித்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், Highlands and Islands Enterprise (HIE) அமைப்பினால் நிர்வகிக்கப்படவுள்ள இந்நிதிக்கான விண்ணப்பங்கள் வரும் 17 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button