உலகம்

தோல்வியில் முடிந்த ட்ரம்பின் முயற்சிகள் ; அதிர வைத்த ஏவுகணைத் தாக்குதல்கள்

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா–உக்ரைன் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.

போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்காத நிலையில், மோதல்கள் தொடர்கின்றன.

இந்நிலையில், இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 28 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button