உலகம்

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

ஸ்பெயின் நாட்டில் கடும் வெப்ப அலை (Heatwave) மற்றும் பலத்த காற்று வீசி வருவதால், காட்டுத்தீ மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அடுத்த 3 நாட்கள் மிகவும் சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸின் போர்டோ (Bordeaux) பிராந்தியத்திலும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நெருங்கி வரும் நிலையிலும், பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதாலும் லண்டன்/லான்டன் (Lanton) பகுதி காட்டுத்தீ மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.

இது 1949-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரான்ஸ் சந்திக்கும் மிக மோசமான காட்டுத்தீ அசம்பாவிதமாகக் கருதப்படுகிறது.

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த இராணுவ வீரர்களுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காட்டுப் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகளில் நூற்றுக்கணக்கான மீட்டர்களுக்கு நீர் தாங்கிகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button