ஏறாவூர் மாரியமன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியோர் மீது வாள் வெட்டுத் தாக்குதல்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது ஜயங்கேணி வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்த நிலையில் ஏனையவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் சம்பவ தினமான நேற்று புதன்கிழமை பகல் ஆலயத்தில் அன்னாதனம் வழங்கி கொண்டிருந்தபோது அதனை வாங்கி சாப்பிட்ட இளைஞன் ஒருவர் சாப்பாடு சரி இல்லை என தெரிவித்தபோது அன்னதானம் வழங்கியவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து 7 பேர் கொண்ட ஐயங்கேணி வாள்வெட்டுக்குழு அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியதில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிபிடித்த நிலையில் ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்த நிலையில் மடக்கி பிடித்த வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவரை பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் இருவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தப்பி ஓடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
![]()