உலகம்

கொல்லப்பட்ட குழந்தைகளுக்காக பழிவாங்குவோம்: ஈரானிய பாதுகாப்பு அதிகாரி சபதம்

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்கள் “எதிரி முழுமையாகத் தோற்கடிக்கப்படும் வரை” தொடரும் என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் கவுன்சிலின் செயலாளர் முகமது பாகர் ஜோல்கதர் (Mohammad Bagher Zolghadr) எச்சரித்துள்ளார்.

மேலும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மற்றும் பாடசாலைக் குழந்தைகள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கப் போவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வச் செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் தெற்கு நகரமான மீனாப்பில் உள்ள சிறுமிகள் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலே மிகப்பெரிய அளவிலான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய தாக்குதலாகும் என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 165 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 95 பேர் காயமடைந்தனர், அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button