பலதும் பத்தும்

நுரையீரலை தாக்கும் நிமோனியா! இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க

நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் கடுமையான தொற்று நோயாகும். இது ஒரு நுரையீரலையோ அல்லது இரு நுரையீரல்களையோ பாதிக்கலாம்.

நுரையீரலின் காற்றுப்பைகள் (அல்வியோலி) திரவம் அல்லது சீழால் நிரம்புவதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவு குறையலாம். நிமோனியா வருவதற்கான காரணங்கள் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள்.

பாதிக்கப்பட்டவர் இருமுதல் அல்லது தும்முதல் மூலம் பரவும் கிருமிகள். அசுத்தமான சூழல் மற்றும் மாசுபட்ட பொருட்கள். வென்டிலேட்டர் சிகிச்சை பெறுபவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

முக்கிய அறிகுறிகள்

சுவாசிக்கும்போது அல்லது இருமும்போது மார்பு வலி

சளியுடன் இருமல்

காய்ச்சல் மற்றும் அதிக வியர்வை

மூச்சுத்திணறல் சோர்வு மற்றும் பசியின்மை

குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு

நுரையீரலை தாக்கும் நிமோனியா! இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Pneumonia In Tamil

யாருக்கு அதிக ஆபத்து?

2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கீமோதெரபி சிகிச்சை பெறுபவர்கள் நுரையீரல் நோய் உள்ளவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் அல்லது நீண்டகால மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள்

இவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று அறிகுறிகள் இருந்தால்கூட உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

எப்படி கண்டறிவது?

ரத்தப் பரிசோதனை மார்பு எக்ஸ்-ரே சளி மாதிரி பரிசோதனை கடுமையான நிலைகளில் ப்ரோன்கோஸ்கோபி (Bronchoscopy) பரிசோதனை.

வீட்டில் செய்யக்கூடிய பராமரிப்பு

நுரையீரலை தாக்கும் நிமோனியா! இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Pneumonia In Tamil

மருத்துவரின் சிகிச்சைக்கு துணையாக மட்டுமே பின்வரும் முறைகளைப் பயன்படுத்தலாம்:

தினமும் பூண்டு சாப்பிடடுவது நிவாரணம் கொடுக்கும்.

சூடான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம்.

வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து பருகலாம்.

கற்பூர எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் கலந்து நெஞ்சில் தடவலாம்.

ஆப்பிள், கீரை, கேரட், பீட்ரூட் போன்ற சத்தான உணவுகளை தினசரி உணவில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button