பலதும் பத்தும்

Zoo-க்கு போய் அழு; இனவெறியை சந்தித்த பிரபலம் Speed

உலகமெங்கும் மக்களிடம் பிரபலமான யூடியூபர் Speed. ishowspeed என்கிற பெயரில் யுடியூப் மற்றும் இன்ஸ்டாராமில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமனவர் யூடியூபர் Speed . இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 51.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் இவர் அர்ஜென்டினா நாட்டு கால்பந்து ரசிகர் ஒருவரால் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். மியாமியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்காக Speed சென்றிருந்தார்.

அப்போது அர்ஜென்டினா ஜெர்ஸி அணிந்திருந்த ஒருவர் கருப்பினத்தனவரான ஸ்பீடை பார்த்து மோசமாக சைகை செய்தார்.

மேலும், ஸ்பீடை பார்த்து ‘குரங்குகள் இருக்கும் Zoo-க்கு போய் அழு’ என ஸ்பானிஷ் மொழியில் நக்கலடித்தார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாக சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் FIFA இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button