பலதும் பத்தும்

தங்கம் என நினைத்து வீட்டில் பாதுகாக்கப்பட்ட பாறை- பழமையான அரிய பொக்கிஷமா?

ஆஸ்திரேலியாவில் ஒருவர் தங்கம் என நம்பி பல ஆண்டுகளாக தனது வீட்டில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்த விசித்திரமான பாறை, உண்மையில் சூரிய குடும்பம் உருவான காலத்தைச் சேர்ந்த சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான அரிய வகை இரும்பு விண்கல் (Iron Meteorite) என்பது விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நபருக்கு, வழக்கமான கற்களை விட அதிக எடையுடனும், பளபளப்பான தோற்றத்துடனும் காணப்பட்ட பெரிய பாறை ஒன்று கிடைத்துள்ளது.

அதன் உள்ளே தங்கம் அல்லது வேறு ஏதேனும் விலைமதிப்புள்ள உலோகம் இருக்கலாம் என சந்தேகித்த அவர், அதை உடைக்க பலமுறை முயன்றுள்ளார்.

எனினும், அந்தப் பாறை மிகவும் உறுதியானதாக இருந்ததால் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

இதையடுத்து, அது மதிப்புமிக்க பொருளாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக தனது வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருந்தார்.

பின்னர் அந்தப் பாறை விஞ்ஞானிகளின் ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனைகளில் அது சாதாரண கல் அல்ல என்பதும், சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான அரிய வகை இரும்பு விண்கல் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

சூரிய குடும்பம் உருவான ஆரம்பக் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இத்தகைய விண்கற்கள், பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் கோள்களின் உருவாக்கம் தொடர்பான முக்கிய தகவல்களை வழங்கக்கூடிய அரிய அறிவியல் பொக்கிஷங்களாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தங்கம் கிடைத்துவிட்டதாக நம்பி பாதுகாத்து வந்த பாறை, இறுதியில் பூமியை விடப் பழமையான விண்வெளி வரலாற்றின் அரிய சாட்சியாக மாறியிருப்பது உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button