இந்தியா

286 நாட்களுக்கு பிறகு கரூரில் முதலமைச்சர் விஜய்!

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் இடம்பெற்ற தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சேர்ந்த 32 பேருக்கு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் வகையில்  பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் தமிழக முதலமைச்சர் விஜய்.

முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் ரோடு-ஷோ செல்ல உள்ள அட்லஸ் கலையரங்கம் முதல் சுற்றுலா மாளிகை வரை கரூர்-கோவை சாலையில் 10 கி.மீ. தூரத்திற்கு சாலை ஓரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் விஜயை காண காலையில் இருந்தே அட்லஸ் மைதானத்தில் மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

கரூரில் தனியார் கல்லூரி அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். விஜய்க்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

கரூரில் நடைபெறும் முதலமைச்சரின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

பின்னர் பேசிய அமைச்சர் விஜயலட்சுமி,”நெசவாளர் நெஞ்சம் குளிர கரூருக்கு வருகை தந்துள்ள முதலமைச்சரை வரவேற்கிறேன்” என்றார்.

கரூருக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலை பரிசாக வழங்கப்பட்டது.

கரூருக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெள்ளி வாளை பரிசளித்தார்.

பின்னர் அவர் பேசியதாவது,”கடந்தாண்டு செப்டம்பரில் கட்சித் தலைவராக கரூர் வந்த ஜோசப் விஜய் தற்போது முதலமைச்சர் வந்துள்ளார்.

தமிழ்நாட்டில் இனிமேல் தளபதி விஜய் ஆட்சி தான். எங்கள் கட்சிக்கு வந்துட்டீங்களா என்று சின்ன பையன் என்னை கேட்கிறான். சின்ன பிள்ளைகள்கூட எங்கள் தளபதி கட்சி என கூறும் நிலையில் தவெக ஆட்சி தான் நிரந்தரம், நிரந்தர முதல்வர் விஜய்” என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உரையாற்றினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button