உலகம்

தமிழக இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடை

தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை  (10) பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை இராஜினாமா செய்தார்.

மறுபுறம் உட்கட்சி மோதல் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இந்த சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கான தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனால் மேற்கூறியத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button