உலகம்

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய அவுஸ்திரேலியாவுடன் ஒப்பந்தம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவுஸ்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய அணுசக்தித் துறைக்குத் தேவையான யுரேனியத்தை அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலியாவிடமிருந்து பெறப்படும் யுரேனியம், பிரத்தியேகமாக அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது போன்ற அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

பாதுகாப்பு நெறிமுறைகள்

 

மேலும், இந்த யுரேனியம் ஏற்றுமதியானது சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் கண்காணிப்புகளின் கீழ் முறைப்படுத்தப்படும்.

2047-ஆம் ஆண்டிற்குள் 100 கிகாவாட் அணுசக்தி திறனை எட்ட இலக்கு வைத்துள்ள இந்தியாவிற்கு, உலகின் 28 சதவீத யுரேனிய இருப்பைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவின் இந்த ஒப்பந்தம் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய அவுஸ்திரேலியாவுடன் ஒப்பந்தம் | Agreement Australia To Export Uranium To India

யுரேனியம் ஒப்பந்தம் தவிர, இரு நாட்டுத் தலைவர்களும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், விண்வெளித் துறையில் கூட்டுமுயற்சியாக இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆஸ்திரேலியாவின் ‘கோகோஸ் கீலிங்’ தீவுகளில் இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்கு ஆதரவாக தற்காலிக விண்வெளி கண்காணிப்பு முனையத்தை அமைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

முன்னதாக இந்தோனேசியாவுக்குச் சென்று பல்வேறு பாதுகாப்பு ஒப்பந்தங்களை முடித்த பிரதமர் மோடி, அவுஸ்திரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை நியூசிலாந்து புறப்படுகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button