உலகம்

சீனா, ரஷ்யாவுடன் ஈரானை இணைக்கும் முக்கிய தொடருந்து பாலத்தை தகர்த்தது அமெரிக்கா

ஈரான் மீதான தனது தொடர் தாக்குதல்களின் இரண்டாவது நாளாக, ஈரானை சீனா மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கும் வடக்கு ஈரானில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து பாலத்தை அமெரிக்கா தாக்கியதாக ஈரானின் அரை-அரசு ஃபார்ஸ் செய்தி நிறுவனம்  வியாழக்கிழமை செய்தி வெளியிட்டது.

வியாழக்கிழமை காலை வடகிழக்கு கோலெஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒக்டே கான் தொடருந்து பாலத்தை குரூஸ் ஏவுகணைத் தாக்குதல் குறிவைத்ததாக அந்த நிறுவனம் மேலும் கூறியது.

தொடருந்து பாதையில் இந்தப் பாலம் ஒரு முக்கிய இடமாகும்

சீனா, துர்க்மெனிஸ்தான் மற்றும் ஈரானை இணைக்கும் தொடருந்து பாதையில் இந்தப் பாலம் ஒரு முக்கிய இடமாகும் என்று அந்த நிறுவனம் விவரித்தது.

சீனா, ரஷ்யாவுடன் ஈரானை இணைக்கும் முக்கிய தொடருந்து பாலத்தை தகர்த்தது அமெரிக்கா | Us Strikes Strategic Railway Bridge Iranதொடருந்து பாதையின் ஒரு பகுதியில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் நடந்ததாக உள்ளூர்வாசிகள் விவரித்ததைத் தொடர்ந்து, தெஹ்ரானுக்கும் வடகிழக்கு நகரமான மஷாத்துக்கும் இடையிலான பயணிகள் தொடருந்து சேவைகளை ஈரான் நிறுத்தியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் அறிவிப்பு

புனரமைப்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சிக்கித் தவித்த பயணிகள் சாலை மார்க்கமாக மஷாத்துக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் ஈரானிய தொடருந்து சேவை கூறியது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் தெஹ்ரானின் திறனை மேலும் குறைப்பதற்காக, அமெரிக்கப் படைகள் ஈரான் மீது மேலதிக தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button