உலகம்

கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாகும்; ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த பிறகு, அமெரிக்கா – ஈரான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், ஈரானுக்கு துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது; ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதலை நிறுத்தினால், நாங்கள் அவர்கள் மீதான முற்றுகையை நிறுத்துவோம்.

ஆனால் ஈரான் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்தினால், நாங்கள் திருப்பி அடிப்போம். அதுவும் முன்பை விடக் கடுமையாகத் திருப்பி அடிப்போம் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாகும் என தெரிவித்துள்ளார் ஜே.டி.வான்ஸ்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button