பலதும் பத்தும்

இரவு தூங்கச் செல்லும் முன் சிங்க் தொட்டியில் இதை செய்யுங்க!

தூங்கச் செல்வதற்கு முன்னர் சிங்க் தொட்டியில் ஒரு கைப்பிடி உப்பை போட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.

பெரும்பாலான வீடுகளில் சிங்க்கை சுத்தம் செய்ய விலையுயர்ந்த கிளீனர்களை பயன்படுத்துகிறோம்.

இருந்தாலும் சிங்க் அவ்வபோது அடைத்துக் கொள்வது, துர்நாற்றம் வீசுவது, தண்ணீர் சரியாக வெளியேறாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் ஏற்படும். இதற்காக சிலர் பிளம்பரை அழைத்து செலவு செய்து பழுது பார்க்கிறார்கள். ஆனால் மேற்கூறிய எதுவும் இல்லாமல் உப்பை மட்டும் பயன்படுத்தி சிங்க்கை எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் விளக்கப்பட்டுள்ளது.

சமையலறை சுத்தத்தில் சிங்க் தொட்டி முக்கிய பங்காற்றுகிறது. காய்கறி கழுவுதல், பாத்திரங்களை கழுவுதல், கை கழுவுதல் போன்ற பல வேலைகள் சிங்க்கில் செய்யப்படுகிறது. ஆனால் இரவில் எவ்வளவு தான் சுத்தம் செய்துவிட்டு உறங்கச் சென்றாலும் காலையில் எழும்பொழுது சமையலறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை காண்கிறோம்.

இதற்கு காரணம் சிங்க் தொட்டியில் உள்ள வடிகால் அல்லது அந்த குழாய்களின் தேங்கி இருக்கும் நீர் தான். இந்த பிரச்சனை குறிப்பாக மழைக்காலங்களில் அதிகமாக காணப்படுகிறது.

இதற்கு ஒரு கைப்பிடி உப்பைக் கொண்டே நம்மால் தீர்வு காண முடியும். இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் சிங் தொட்டியில் ஒரு கைப்பிடி உப்பை சேர்க்கவும். இது சிங்க் துர்நாற்றம் மற்றும் குழாய் அடைப்பிலிருந்து நிவாரணம் தரும் எளிய வழிமுறையாகும்.

உப்பிற்கு ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையும், அழுக்கை தளர்த்தும் இயற்கையான திறமையும் உள்ளது. இது சிங்க் குழாய்களில் உள்ள பிசுபிசுப்பான அழுக்கை நீக்க உதவும். சமையலறையில் சிங்க் குழாய்களில் எண்ணெய், மசாலாக்கள், சிறிய உணவு துகள்கள், சோப்பு ஆகியவை தினமும் சேர்ந்து நாளடைவில் குழாய்களில் ஒட்டுக்கொண்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இரவில் சிங்கை சுத்தம் செய்த பின்னர் ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து விட்டு செல்வது குழாய்களில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும். பிசுபிசுப்பை குறைக்கும். அடப்புகளைச் சரி செய்யும்.

துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும். மேலும் பூச்சிகள், கரப்பான் பூச்சிகளையும் இது கட்டுப்படுத்தும். ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு சுடு தண்ணீர், ஒரு தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி சமையல் சோடா ஆகியவற்றை கலந்து குழாய்களில் ஊற்றலாம். இது குழாய் அடைபட்டு இருந்தாலோ அல்லது அதிக துர்நாற்றம் வீசினாலோ ஒரு தற்காலிக தீர்வைத் தரும். ஆனால் பெரிய அடைப்பு அல்லது வடிகால் பிரச்சினை இருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்து தராது.

மேலும் சமையலறையில் எண்ணெய் நிறைந்த உணவுகள், பயன்படுத்திய எண்ணெய்களை நேரடியாக சிங்க்கில் கொட்டக் கூடாது. உணவுத் துண்டுகளை குப்பைத் தொட்டியில் போட வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை சுடு தண்ணீர் கொண்டு சிங்கை கழுவ வேண்டும். சிங்க் குழாயில் சிறிய வடிகட்டிகளை பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற சிறிய பழக்கங்கள் சமையலறையை சுத்தமாகவும், துர்நாற்றம் இல்லாமலும் வைத்திருக்க உதவும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button