உலகம்

உலகம்நான் மூன்றாவது முறையாக பதவியேற்க மாட்டேன் – ட்ரம்ப்‘

அமெரிக்க மக்கள் தங்கள் சுதந்திரத்தை யாரும் பறிக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

அமெரிக்கர்கள் உலகின் மிகவும் தைரியமான மற்றும் சிறந்த மக்கள்.

அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் முழுமையான மத சுதந்திரம் உள்ளது என்றும், அமெரிக்கா உலகெங்கிலும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என்றும், அமெரிக்காவை ஒருபோதும் தோல்வியடைய விடமாட்டோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நான் மூன்றாவது முறை பதவியேற்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள், ஆனால் நான் அவ்வாறு செய்யமாட்டேன், ஏனென்றால் எனக்கு மோதல் வேண்டாம்.

எங்கள் ஆட்சிக்காலத்தில் நாங்கள் பெரும் வெற்றிகளை அடைந்துள்ளோம். வெனிசுலாவைப் பாருங்கள், ஈரானைப் பாருங்கள், நாங்கள் அதை அழித்துவிட்டோம்.

அமெரிக்கா உலகின் மிக வலிமையான இராணுவத்தைக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button