உலகம்

தென்னாப்பிரிக்காவில் சாலையில் கவிழ்ந்த பேருந்து: 16 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்

தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தில் குறைந்தது 16 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை கேப் டவுன் நகரில் இருந்து இடுத்வா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது இந்த ஏற்பட்ட இந்த விபத்தில் மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தின் போது பேருந்தில் கிட்டத்தட்ட 78 பயணிகள் இருந்ததாக சாலை போக்குவரத்து மேலாண்மை கழகத்தின் செய்தித் தொடர்பாளர் சைமன் ஸ்வான் தகவல் அளித்துள்ளார்.

சாலையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதே சமயம் விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய பொலிஸார் தீவிரமான விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வொர்செஸ்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயம் அடைந்த 43 பயணிகளும் சம்பவ இடத்திலேயே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button