பலதும் பத்தும்

மாம்பழங்களை சாப்பிடும் முன்பு தண்ணீரில் ஏன் ஊற வைக்கனும் தெரியுமா?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாம்பழத்தினை சாப்பிடுவதற்கு முன்பு ஏன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மாம்பழம்

கோடை காலம் ஆரம்பித்துவிட்டாலே மாம்பழ சீசனும் ஆரம்பித்துவிடும். பழங்களின் அரசனான மாம்பழம் பல வகைகளில் காணப்படும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மாம்பழத்தை சாப்பிடும் முன்பு தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுகின்றனர்.

கோடை காலத்தில் கிடைக்கும் பழங்கள் நமது உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் ஆகும். அதாவது அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்கள் கோடை வெயிலிலிருந்து நம்மை பாதுகாப்பது மட்டுமின்றி உடம்பிற்கு தேவையான நீர்ச்சத்தையும் அளிக்கின்றது.

மேலும் மாமபழத்தில் உள்ள வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்கி, உடலை குளிர்விக்கும் என்று நம்பப்படுகின்றது.

மாம்பழங்களை சாப்பிடும் முன்பு தண்ணீரில் ஏன் ஊற வைக்கனும் தெரியுமா? | Mangoes Soaked In Water Before Eating

உடல் சூட்டை அதிகரிக்குமா?

ஆனால் அதிகமாக மாம்பழம் சாப்பிட்டால் உடலின் சூட்டை அதிகரிக்கின்றது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் மாம்பழங்கள் அதிகமாக சாப்பிட்டால் முகப்பருக்கள் ஏற்படவும், செரிமான அமைப்பு பாதிக்கப்படும் என்று வயிறு சம்பந்தமாக பிரச்சனை ஏற்படுமாம்.

குழந்தைகள் மாம்பழத்தினை தோலுடன் சாப்பிடுவார்கள். இவை நல்லதல்ல என்றும் கூறப்படுகின்றது. ஏனெனில் மாம்பழ தோலில் இருக்கும் சில ரசாயணங்கள் அல்லது சுரப்பு தோலில் பட்டால் சொறி ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே பழங்களை நன்றாக தண்ணீரில் ஊற வைத்து கழுவி, தோல் நீக்கி குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. ஆனால் குழந்தைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பழங்களை கொடுக்க வேண்டும்.

மாம்பழத்தினை சாப்பிடுவதற்கு முன்பு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம ்தண்ணீரில் ஊற வைப்பது அவற்றின் காரத்தினை குறைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button