இலங்கை

பிள்ளையான் – கருணா – இனியபாரதிக்கு ஆபத்தாக மாறிய அநுரவின் அறிவிப்பு

இலங்கை அரசியலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்  அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நாடாளுமன்ற உரையில், நாட்டில் வெள்ளை வான்கள் பற்றிய பயம் இருக்கவில்லையா? தனது தோட்டம் இடிக்கப்படுவதை எதிர்த்த ஒருவர், இலக்கத் தகடுகள் இல்லாத வெள்ளை வான்களில் கடத்தப்பட்டார் என தெரிவித்திருந்தார்.

மேலும் இவை சிவில் மோதல்கள் அல்ல. ஒரு சிறிய குழுவினர் தங்களின் சொந்த அரசியல் நலன்களுக்காக இந்த கொடூரமான கொலைகளைச் செய்துள்ளனர். இந்தக் கொடூரமான குற்றங்களுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதற்கு நாம் நிச்சயமாகக் கடமைப்பட்டிருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெள்ளை வேன் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய ஆதாரங்கள் திருகோணமலை கடற்படை தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. திருகோணமலை கடற்படை தளத்தில்தான் கடத்தப்படுபவர்கள் அல்லது கடத்தப்படுபவர்களது விபரக்கொத்து இருந்துள்ளது.

இவை காணாமல் ஆக்கப்பட்டது 2015இல் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இவற்றுடன் தொடர்புபட்ட ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரம் முன்னாள் ஆயுதக்குழு தலைவர்களான பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்), கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்) மற்றும் இனியபாரதி ஆகியோருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button