பலதும் பத்தும்

உங்களது கை ரேகையில் M, Y, X எழுத்து தெரியுதா? கர்ம ரேகை கூறுவது இதுதான்

நம்து கையில் உள்ள ரேகையில் கர்ம ரேகை எந்த வகையில் காணப்படுகின்றது என்பதையும், இவை எதைக் குறிக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தில் ஒருவரது எதிர்காலத்தினை தெரிந்து கொள்வது போன்று ஒருவரது கைரேகையை வைத்தும் சில விடயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த கர்ம ரேகைகள் 3 வகைகளாக பிரிக்கப்படுகின்றது. சஞ்சிதா( கடந்த காலம்), கிரியாமானம் (நிகழ்காலம்), அகாமி (எதிர்காலம்) என்று பிரிக்கப்படுகின்றது.

இவை சில அடையாளங்களை வெளிப்படுத்துகின்றது. உள்ளங்கையில் M,Y அல்லது X என்ற எழுத்தை கண்டுபிடித்து இதன் மூலமாக நீங்கள் அர்த்தத்தினை தெரிந்து கொள்ள முடியும்.

M வடிவம்

உங்களது உள்ளங்கையில் M வடிவ தெரிந்தால் இவை எதிர்கால கர்மத்தை குறிக்கின்றது. தற்போது நீங்கள் சிந்திக்கும் அல்லது திட்டமிடும் காரியங்கள் எதிர்காலத்தில் நல்ல பலனை அளிக்கும்.

எந்த தொழிலை தேர்ந்தெடுத்தாலும், அதில் சிறந்து விளங்குவதுடன், வெற்றியையும் பெறுவீர்கள். பண விடயத்தில் புத்திசாலியாகவும் இருப்பீர்கள்.

உங்களது நிதிகளை எவ்வாறு கையாள்வது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியுமாம். ஆகவே நீங்கள் சுமந்து செல்வது உங்களது கடந்த காலத்தை மட்டுமின்றி ஆற்றலையும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உங்களது கை ரேகையில் M, Y, X எழுத்து தெரியுதா? கர்ம ரேகை கூறுவது இதுதான் | The Letter In Your Palm Tell About Your Future

image: themindsjournal

Y வடிவம்

உங்களது கையில் Y வடிவத்தில் ரேகை காணப்பட்டால் அவை கடந்தகால கர்மத்தை குறிக்கின்றது. அதாவது முந்தைய பிறவியிலும் தீர்க்கப்படாமல் உள்ள அனைத்து கடந்த கால செயல்களையும் குறிக்கின்றது.

அதாவது கடந்த காலத்திலிருந்து இந்த உலகுக்கு கொண்டுவந்த பரம்பரை குணங்கள், மறைந்திருக்கும் ஆற்றல் இவற்றினை குறிக்கின்றது. இந்த ரேகை காணப்பட்டால் கடந்த காலத்தில் உள்ள உணர்ச்சிகரமான நினைவுகள் மற்றும் பாடங்களை சுமந்து கொண்டிருப்பீர்களாம்.

உங்களது கை ரேகையில் M, Y, X எழுத்து தெரியுதா? கர்ம ரேகை கூறுவது இதுதான் | The Letter In Your Palm Tell About Your Future

X வடிவம்

உங்களது கையில் X வடிவத்தில் ரேகை காணப்பட்டால் அவை நிகழ்கால கர்மத்தை குறிக்கின்றது. அதாவது தற்போதைய சூழ்நிலையில் உருவாகும் கர்மாவின் அடையாளமாம்.

ஆனால் இவை முழுவதுமாக கட்டுப்படுத்தக்கூடிய கர்மம் ஆகும். கடந்த கால கர்மம் மாற்றமுடியாமல் இருக்கும். ஆனால் தற்போதைய காலத்தினை உங்களது நடத்தையை வைத்து செம்மைப்படுத்த, இந்த கைரேகை மூலமாக கிடைக்கும் நுண்ணறிவுகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button