ரணில் – சஜித் இணைய இருவரே பெரும் தடை; அவர்களைத் தூக்கி எறியுங்கள்

ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் இரண்டு கட்சிளிலும் பெரும்பான்மையானவர்கள் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் இரண்டுபேரே இதற்கு தடையாக இருந்து வருகிறார்கள். இரண்டுபேருக்காக கட்சியின் எதிர்காலத்தை விட்டுக்கொடுக்க முடியாது என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படும் வேலைத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய செயற்குழுவிற்குள் “பூதத்தின் புதல்வர்கள்” ஊடுருவியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியில் நீண்ட காலமாக இருந்து வந்த சிரேஷ்ட உறுப்பினர்களை ஓரங்கட்டிவிட்டு, இந்த “பூதத்தின் புதல்வர்கள்” உள்ளே நுழைந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் அரசியல் ரீதியாக தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமாயின், இரு தரப்பினரும் உடனடியாக ஒன்றிணைய வேண்டும். இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் இரண்டு கட்சிகளிலும் இருக்கும் 98 வீதமானவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
என்றாலும் ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் இரண்டுபேர் இதற்கு தடையாக இருக்கிறார்கள். இரண்டு கட்சியிலும் இருக்கும் திறமமையானவர்கள் ஒன்றிணையும்போது இவர்கள் கட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என்ற அச்சம் இவர்களுக்கு இருக்கிது. அதனாலே இவர்கள் இருவரும் இணைந்து செயற்படும் நடவடிக்கைக்கு பின்வாங்கி வருகிறார்கள்.
எவ்வாறாயினும், இவர்கள் இருவரும் தூக்கி எறியப்பட்டாலும் பரவாயில்லை, தற்போதைய தலைமையின் கீழ் இரண்டு கட்சிகளும் மிக விரைவில் ஒரே முன்னணியாக ஒன்றிணைய வேண்டும், அதன் பின்னர் பெரும் பலத்துடன் முன்னோக்கிச் செல்ல முடியும்.
அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்த படியாக நானே சிரேஷ் உறுப்பினர். ஆனால் கட்சியின் செயற்குழு கூட்டங்களுக்கு என்னை அழைப்பதில்லை. ஆனால் கட்சிக்கு வெளியில் இருப்பவர்களை இணைந்துசெயற்பட அழைக்கிறார்கள். இது புதுமையான விடயமாகும்என்றார்.
![]()