இலங்கை

நெடுந்தீவில் ஒரு ஏக்கர் காணியை கடற்படைக்கு வழங்குமாறு ஒற்றைக் காலில் நிற்கும் அமைச்சர்; கஜேந்திரகுமார் கடும் எதிர்ப்பு

நெடுந்தீவில் ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடந்த யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

யாழ்.மாவட்டக் காணிப் பயன்பாட்டுக் கூட்டம் மக்கள் பிரதிநிதிகளது பங்குபற்றுதல் இல்லாமல் இரகசியமாக நடாத்தப்பட்டுக் காணி வழங்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையையும் அவர் அம்பலப்படுத்தினார். இந்தக் காணியைக் கடற்படைக்கு வழங்கக் கூடாது அக் காணியைப் பொது மக்களுக்குப் பகிர்ந்து வழங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

எனினும், மக்கள் காணிகள் மக்களுக்கே வழங்க வேண்டும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசிப் பதவிக்கு வந்த தேசியமக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் கடற்படைக்கே காணி வழங்கப்பட வேண்டுமென ஒற்றைக் காலில் நின்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button