இலங்கை

தமிழின அழிப்பின் நினைவகமாக மாறவுள்ள செம்மணி இந்து மயானம்

செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தை, தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனால் சபை அமர்வில் முன்மொழியப்பட்டது.

இந்த முன்மொழிவை முன் வைத்து உரையாற்றிய தவிசாளர் மயூரன் தனது உரையில்,

இனஅழிப்பு செய்யப்பட்டு புதைக்கப்பட்ட எமது உறவுகள் இன்று செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்திலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகின்றனர். எம்மீது நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பின் சாட்சியகமாக இந்த மயானம் காணப்படுகின்றது. இந் நிலையில் இன அழிப்பின் சாட்சியங்களை பாதுகாக்க வேண்டியதும் அதனை இளைய தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

இந்த இந்து மயானம் எமது சபை எல்லைக்குள் காணப்படுகின்ற நிலையில் இதனை ஒரு மயானமாகத் தொடர்ந்தும் பேணாமல், இதனை எம்மீதான இனஅழிப்பின் ஒரு சாட்சியகமாக -நினைவகமாக பேணுவதற்குரிய நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற முன்மொழிவினை முன்வைப்பதோடு இது தொடர்பில் செம்மணி சித்துபாத்தி இந்து மயான சபையினருடன் கலந்துரையாடல் செய்து அது தொடர்பான விபரங்களுடன் இந்த முன்மொழிவினை உங்களின் ஏகமனதான ஆதரவுடன் ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்காக அடுத்த சபை அமர்வில் சமர்ப்பிக்கின்றேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button