ராஜபக்சக்களை துரத்தும் கடந்தகாலம்! அடுத்த கைது பட்டியலில் யார்

பல்வேறு மோசடி குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச,பசில் ராஜபக்ச,யோசித ஆகியோர் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், யோஷித ராஜபக்ச இலஞ்ச ஆணையால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சுற்றுலா மேம்பாட்டுப்பணியகத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
30 வருட கால யுத்த வெற்றி, .ராணுவத்தினர் இந்தக் கதைகளை வைத்து தான் ராஜபக்சக்கள் எப்படியாவது இந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து வழக்கு விசாரணைகளில் இருந்து, கைது நடவடிக்கைகளில் இருந்து தம்மை தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
வழக்கு விசாரணைகளை அவதானிக்கும் போது அடுத்து இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதிவசந்த கருணாகொட விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்கின்ற சந்தேகம் எழுகின்றது.
![]()