தமிழக முதலமைச்சரும் திருக்குறளும்!…. சங்கர சுப்பிரமணியன்


திருக்குறள் எக்காலத்துக்கும் எம்மதத்துக்கும் எந்நாட்டவருக்கும் பொருந்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனக்கு அதில் அதிக அளவில் உடன்பாடு உண்டு. திருக்குறள் ஒன்றே பார்ப்பவர்களின் பார்வைக்கு ஏற்ப பொருள் தரும். சான்றாக ஒன்றைச் சொல்வேன். இராமாயணத்தையோ சிலப்பதிகாரத்தையே படிக்கும் போது படிப்பவர்களுக்கு ஏற்ப அதில் சொல்லப்பட்டிருப்பவை மாறாது.
யார் படித்தாலும் சீதையை இராவணன் சிறை எடுத்தான் என்பதும் கண்ணகி பாண்டிய மன்னன் சபையில் நீதிக்காக வாதாடியதும் மாறாது. ஆனால் திருக்குறள் பார்ப்பவர் பார்வைக்கேற்ப மாறுபடும். எனது பார்வையில் முதலாம் அதிகாரத்தில் உள்ள பத்து குறட்பாக்களும் இயற்கை வாழ்த்தாக தெரிகிறது.
ஒரு சிலையை ஒருவர் கல்லாகவும் பார்க்கலாம் கடவுளாகவும் பார்க்கலாம். கல்லாகப் பார்பவர் கண்ணில் எந்தவகை கல்லில் செதுக்கப்பட்டது என்ற பௌதீக கண்ணோட்டத்தில் பார்வை விரிகிறது. அச் சிலையை கடவுளாக பார்பவர் கண்ணில் தன்னை கடைத்தேற்றும் நம்பிக்கையாக பார்க்கப் படுகிறது.
எனது கண்களை பாரதி வேறொரு வகையில் திறந்தார். பாரதிதாசனின் கொள்கை வேறென்றாலும் அவர் பாரதியின் தாசன் ஆனார் அல்லவா?
“காண்பவவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ
காண்பதுவே உறுதி கண்டோம்
காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் இந்த காட்சி நித்தியமாம்”
என்ற வரிகள் இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல என்று கூறுவதோடு நிலையாமைத் தத்துவத்துக்கு அடிகோளுகிறது.
அந்த வகையில் ஆதி பகவன் என்பதை ஆதி பகலவன் என்ற நான் காணும் சக்தி காட்சியாகவும் சாட்சியாகவும் நின்று நிலை நிறுத்துகிறது. இருப்பினும் இருண்டிருந்த அண்டத்தின் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நிலையற்ற தன்மையை உடைத்து பகலவன் தோன்றினான். நிலையற்ற உலகில் மொழிகள் தோன்றி அவற்றுள் அகரம் முதலானதுபோல் பகலவனும் அண்டமதில் தோன்றி முதலானான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இப்போது தமிழக அமைச்சரைப் பற்றிப் பார்ப்போம். அவர் பார்வையில் முதல் குறளுக்கு ஒரு காரணம் தோன்றியிருக்கிறது.
தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் பற்றி பேசுவதற்கு முன் அவருக்கு முன் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற இரு உச்ச நடிகர்களைப் பற்றிப் பார்ப்போர். அவர்களும் இவரைப் போன்றே மூன்றெழுத்து நடிகர்களே.
தமிழக அரசியலில் திரைப்படத் துறையினர் ஆதிக்கம் தவிர்க்க முடியாமல் போன
ஒன்றாகும். அதற்கு காரணம் இயல் இசை நாடகம் என்ற முத்தமிழும் வித்தாய் விதைக்கப்பட்ட திரைப்படம்தான் என்பதில் ஐயப்பாடில்லை. முதலாவதாக எம்.ஜி.ஆர். இவர் தமிழக முதல்வராக ஆகியிருந்த போதும் இவர் திமுகாவில் இருந்து பிரிந்து அந்த திமுக என்ற பெயருடன் அண்ணாவையும் இணைத்தே கட்சியின் பெயராக்கினார்.
திமுக வுன் கொள்கைகளை திரைப்படத்தில் பிரதிபலித்து புரட்சி நடிகர் என்ற பெயரோடு நட்சத்திரக் கவர்ச்சியும் சேர காலம் அவரை முதல்வராக்கியது. முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அரசியலுக்குள் நுழையவில்லை. அடுத்து உச்ச நட்சத்திரமாக ரஜினி வந்தார். ஆனால் அவர் அரசியலில் வரலாமா கூடாதா என்ற நினைப்பிலேயே நிலைமையைத் தவறவிட்டார். நடிகர் விஜய் காந்தும் வந்து ஓரளவு சாதனை புரிந்து மறைந்தார்.
நடப்பதும் நடக்காமல் போவதும் நம் கையில் இல்லை. அந்த வகையில் சிறந்த நடிகர்களான சிவாஜியும் கமலும் முயற்சியாவது செய்தார்கள். எதையும் காலம் கருதி செய்யும்போது ஞானத்தைப் பெறலாம். இந்த ஞானத்தைப் பெற்றவராக திரு. விஜய் அவர்கள் இருந்ததால் கொக்கொக்க கூம்பும் பருவத்து இருந்தார். குத்தொக்க சீர்த்தவிடத்து என்று காலம் பார்த்து காத்திருந்து செயலாற்றினார்.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் மேல் மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். இலஞ்சம், சட்ட ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, கனிமவளக் கொள்ளை மது மற்றும் போதைப் பொருட்கள் என்று தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மற்றொரு மூன்றெழுத்துக்கார்ரும் அதே திரைப்படத் துறையைச் சாரந்தவருமான திரு. சீமான் அவர்கள் நாட்டில் நிலவும் அவலங்களை விடாமல் தோலுரித்துக் காட்டிக் கொண்டிருந்தார்.

மக்களின் மனநிலையும் மாற்றத்தை வேண்டிக் காத்திருந்தபோது அந்த எதிர்பார்ப்பை கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்த திரு. விஜய் அவர்கள் குத்தொக்க சீர்த்தவிடத்தாய் நின்று தேர்தல் வெற்றி மூலம் அறுவடை செய்தார். திரு. சீமான் அவர்களின் உழைப்பு அசாத்தியமானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவரின் உழைப்பு திரைக்கவர்ச்சின் முன் இலவு காத்த கிளியாக மாறிப் போனது.
இருந்தாலும் மாற்றம் என்ற தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்த ஒன்று நிகழ்ந்துள்ளது. இருதலைக் கொள்ளியாய் திமுக மற்றும் அதிமுக என்ற இரு கட்சிகளுக்குள் அகப்பட்டு எறும்பு போல் திண்டாடிக் கொண்டிருந்த மக்கள் தப்பித்து தண்ணீரில் குதித்திருக்கிறார்கள். எறும்பு தண்ணீரில் நீந்தும் தன்மையுடையது. அதனால் மூழ்குவதாக உணர்ந்தால் மிதந்து கொண்டிருக்கும் எறும்பு மூழ்காமல் தப்பித்துவிடும்.
இப்போது திருக்குறளுக்கு வருவோம். தேர்தல் வெற்றிபெற்ற திரு. விஜய் முதல்வரானார். அவருக்கு திருக்குறளின் முதல் குறள் எப்படி பொருள் தந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம். அவர் பார்வையில் அகர முதல் எழுத்தெலாம் என்ற குறள்,
“அநீதி அராஜகம் தில்லு முல்லு இவையெல்லாம்
திமுக முதற்றே உலகு” என்று பொருள் தந்திருக்கிறது.
திருக்குறளை தமிழரின் மறையாகப் பார்க்கிறேன். மதத்தில் மதநூலைப் பார்பப்பதுபோல் தமிழினத்தின் மறையாகவே பார்க்கிறேன். அதனால் திருக்குறள் பற்றியும் அதன் புகழ் குறித்தும் வரும் செய்திகள் என் காதில் இன்பத் தேனை பாய்ச்சுகிறது.

அத்தோடு, ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே… ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே…அலைபாயுதே…மனம் ஏங்குதே…ஆசைக் காதலிலே என்பது போல் திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்கும்படி புதுடெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கோரிக்கை வைத்ததாக ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுவதால் ஆசைக்காதலில் அலைபாய்ந்து மனம் ஏங்குகிறது.
டெல்லி செவிசாய்க்கிறதோ இல்லையோ, என் ஈழத்து சகோதர சகோதரிகள் இந்திய அரசு தமிழைச் செம்மோழி என்று அறிவித்தபோது தமிழ் ஏற்கனவே செம்மொழிதானே அதை அறிவிப்பு செய்துதான் தெரிந்து கொள்ள வேண்டுமா? என்றார்கள். முற்றிலும் மறுக்கமுடியாத உண்மை.
அதேபோல் உலகெலாம் பரவி பல மொழிகளில் மொழிபயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் சர்வதேசிய இலக்கியமாகும். முதல்வரின் முயற்சியால் இந்திய அரசு திருக்குறளை தேசிய இலக்கியமாகவாவது அறிவிக்கிறதா என்று பார்ப்போம்.

![]()