பலதும் பத்தும்

அசுத்தமான உணவால் 86.6 கோடி மக்கள் பாதிப்பு!

உலக சுகாதார அமைப்பின் புதிய ஆய்வின்படி, பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி, இரசாயனங்கள் கலந்த அசுத்தமான உணவால் ஆண்டுதோறும் 88.6 கோடி பேர் கடுமையான நோய்களுக்கு ஆளாகி 15 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர். ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, குறிப்பாக இந்தியாவில் ஏழை மக்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் இரசாயன அபாயங்களுக்கு உள்ளாகும் அதாவது அசுத்தமான உணவை உட்கொள்வதால் , ஆண்டுதோறும் 88.6 கோடி பேர் கடுமையான நோய்களால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என்றும், 15 லட்சம் இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகபட்சமாக பாதிக்கபட்டுள்ளார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று (04) வெளியிட்ட புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நிலவும் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் 60% மரணங்கள் உலகளவில் கடந்த 2,000 ஆம் ஆண்டிலிருந்து ஒட்டுமொத்த உணவு சார்ந்த நோய்களின் விகிதம் ஓரளவுக் குறைந்திருந்தாலும், குறிப்பிட்ட சில பிராந்தியங்களில் இந்த பாதிப்பு இன்னும் மிகத் தீவிரமாகவே உள்ளது.

குறிப்பாக, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மட்டுமே உலகளாவிய உணவுப் பாதிப்பால் முக்கால்வாசிப் பங்கையும், ஒட்டுமொத்த உயிரிழப்புகளில் 60 சதவீதத்தையும் கொண்டுள்ளன.

இந்தியாவை பொறுத்தவரையில் பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுதோறும் சுமார் 10 கோடி (100 மில்லியன்) பேர் கடுமையான நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர் மற்றும் 1,20,000 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் குழந்தைகள், ஏழை மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் (UN) தகவல்களின்படி, அசுத்தமான உணவால் ஏற்படும் உலகளாவிய நோய்ச் சுமையில், தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் பங்கு அதிகமாக உள்ளது.

பெரும்பாலான உணவுவழி நோய்களுக்கு பாக்டீரியாக்கள், வைரஸ்கள் (சால்மோனெல்லா போன்றவை) மற்றும் ஒட்டுண்ணிகளே காரணமாக அமைகின்றன. முறையற்ற சுகாதாரம், பாதுகாப்பற்ற நீர் மற்றும் சுகாதாரமற்ற நடைமுறைகள் இந்நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கின்றன.

மேம்படுத்தப்பட்ட நீர், சுகாதாரம் மற்றும் தூய்மை, பாஸ்டரைசேஷன் போன்ற உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்களை தடுத்திருக்க முடியும் என்று கூறியுள்ளது உலக சுகாதார அமைப்பின் அறிக்கை.

உணவில் உள்ள சில உலோகங்களின் அளவு காலப்போக்கில் குறைந்து வந்தாலும், உணவு வழியாக இந்த உலோகங்கள் உட்கொள்ளப்படுவதால் ஏற்படும் இருதய நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் ஆகியவற்றின் பாதிப்பு குறித்த விவரங்களை இந்த புதிய ஆய்வுகள் முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளன.

உணவுப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு வேளை உணவோடும், ஒவ்வொரு குடும்பத்தோடும், அன்றாட வாழ்வோடும் தொடர்புடையது. பாதுகாப்பற்ற உணவு நீண்டகாலமாகவே ஒரு முக்கிய பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது, ஆனால், அதனால் ஏற்படும் மனித மற்றும் பொருளாதார ரீதியான பெரும் பாதிப்புகள் குறித்த முழுமையான புரிதல் இதுவரை நம்மிடம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button