பலதும் பத்தும்

ஒரே பாய்ச்சலில் தாய் பன்றியின் கண்முன்னே குட்டியை கவ்விய சிறுத்தை! இறுதியில் என்ன நடந்தது?

தாய் பற்றியின் கண் எதிரிலேயே சிறுத்தையொன்று குட்டி பன்றியை கொடூரமாக வேட்டையாடிய பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே வேட்டை விலங்குகள் என்றால் மனிதர்கள் உட்பட பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் இனம் புரியாத பயம் இருப்பது இயல்பு தான்.

காரணம் இவற்றின் அசுர பிடியில் சிக்கினால் உயிர் பிழைப்பது அரிது. காட்டில் வாழும் மிருகங்களின் வேட்டை திறன் தொலைக்காட்சிகளில் பார்க்கும் போதே பார்ப்பவர்களுக்கு பீதியை கிளப்புவதாக இருக்கும்.

குறிப்பாக சிறுத்தை மிகவும் தந்திரமான முறையில் வேட்டையாடக்கூடியது. சிறுத்தை, தானாகவே வேட்டையாடி உண்பதும் உண்டு. பிற விலங்குகள் உண்டதுபோக, மீதமுள்ள கழிவு மாமிசங்களை உண்பதும் உண்டு.

எனவே, சிறுத்தைகளுக்கு, எப்போதும் உணவுப்பிரச்சினை ஏற்படுவதே கிடையாது. இந்நிலையில்,விழுந்த ஓர் மரத்தின் மேல் பன்றிக்குட்டியை கதற கதற வேட்டையாடிய சிறுத்தையை தாய் பற்றியும் ஏனைய பன்றிகளும் தடுக்கவே முடியாமல் துடித்த காட்சி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button