பலதும் பத்தும்

இந்தியாவின் பெரும் பகுதிகளை வாட்டும் வெப்பம் – 48 செல்சியஸ் வரை பதிவு!

இந்தியாவின் பெரும் பகுதிகள் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

வானிலை ஆய்வாளர்கள் அதிகபட்சமாக 45 பாகை செல்சியஸ் வரையான வெப்பநிலை பதிவாகும் என எச்சரித்துள்ள நிலையில், சில பகுதிகளில் 48 பாகை செல்சியஸ் வரையான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடும் வெப்பம் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் இரவு நேர பணிக்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பாடசாலைகள் முன் கூட்டியே கோடை விடுமுறையை அறிவித்துள்ளன.
இதற்கிடையே இந்தியாவின் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மனிதர்களின் தவறான செயற்பாடுகளே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2008 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், வெப்பத்தின் காரணமாக ஆண்டுதோறும் 1,116 பேர் வரை உயிரிழந்துள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button