பலதும் பத்தும்

இலங்கையில் ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயரும் சாத்தியம்!

இலங்கையில் ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயரக் கூடிய சாத்தியங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான உள்நாட்டு ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதன் நேரடித் தாக்கம் காரணமாக, இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களின் விலைகளை திருத்தம் செய்ய வேண்டியிருக்கும் என துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் இந்த நடவடிக்கையை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என இலங்கை அலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, மிக விரைவில் உள்நாட்டு சந்தையில் உள்ள அலைபேசிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உதிரிப்பாகங்களின் தற்போதைய விலைகள் 20 தொடக்கம் 25 வீதம் வரையில் உயர்வடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களினதும் விலைகளிலும் தாக்கம் செலுத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button