16 ஆம் ஆண்டு விழா காணும் அக்கினிக்குஞ்சு… சங்கர சுப்பிரமணியன் வாழ்த்துச் செய்தி

பதினாறாம் ஆண்டுவிழா காணும் அக்கினிக்குஞ்சு இணையதளத்துக்காக
பொழியும் எனது வாழ்த்து மழை!
திரையிசைப் பாடலை விரும்புபவன் நான். பதினாறும் நிறையாத பருவமங்கை காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை என்ற பாடலை இயற்றியவர் கவிஞர் மருதகாசி. என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா…வா…விளையாடு என்ற பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம். பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளயம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா என்ற பாடலை வடித்தவர் வாலி.
பருவ மங்கையை நினைத்து ஒரு கவிஞரும் அருகில் வா விளையாட என்று ஒரு கவிஞரும் அழைக்க ஒரு கவிஞரோ தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா என்று தாயாகமலே பல குழந்தைகளுக்காக தாலாட்டுப் பாடுகிறேன் என்றார்.
அது போல் இங்கும் ஒரு படைப்பாளி தமிழுக்காகவும் தமிழ் படைப்பாளிகளுக்காகவும் படைப்பாளிகள் படைத்தவற்றை படிப்பவர்களுக்காகவும் இணையதளம் ஒன்றை பதினாறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
யார், யார், யாரவர் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ? என்று கேள்விக்கணை தொடுப்பவர்களுக்கு நான் விடுக்கும் பதில். உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது, உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது என்பதால் அவர் யார் எனச் சொல்கிறேன்.
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன் பார்த்திருந்த காலமெல்லாம் பழம்போல் கனிந்ததம்மா என்று சொல்லி மகிழ்ந்து பெருமையடையும் அளவுக்கு அக்கினிக்குஞ்சு இணையதளத்தை தொடங்கி பதினாறு ஆண்டுகளாக தடையின்றி வெற்றிகரமாக நடத்திவரும் அன்பிற்கினிய அருமை நண்பர் யாழ். பாஸ்கர் அவர்கள்தான் என்பேன்.
இந்த இனியவேளையில் மயக்கும் மாலைப் பொழுதே நீ போ…போ… இனிக்கும் இன்ப இரவே நீ வா…வா என்பதுபோல் மயக்கும் மாலைப்பொழுதே நீ வா…வா… இனிக்கும் இன்பம் தரவே நீ வா…வா… என்று வருகின்ற ஜூன் மாதம் ஆறாம் நாள் மாலை அக்கினிக்குஞ்சு இணையதளத்தின் பதினாறாம் ஆண்டு விழா நடைபெறுகிறது.
அவ்விழாவினைச் சிறப்பிக்க மாபெரும் இசையருவி இசை நிகழ்ச்சியும் அரங்கேறுகிறது. அற்புதமான இசையருவியில் குளித்து மகிழவும் இசை நிகழ்ச்சி சிறப்படையவும் வாழ்த்துவதோடு திரு. யாழ். பாஸ்கர் அவர்களையும் அக்கினிக்குஞ்சு இணையதளத்தையும் வாழ்த்துகிறேன்.
திரையிசை மெட்டிலே ஒரு கவிதைசெய்து சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா என்பதற்கொப்ப எண்ணத்தைச் சொல்ல ஒரு கவிதை.
எண்ணிவந்தேன் எண்ணிவந்தேன்
எந்நாளும் எண்ணி வந்தேன்
எண்ணிவந்த எண்ணமெல்லாம்
எண்ணம்போல் உயர்ந்ததம்மா…..
எண்ணிவந்தேன் எண்ணிவந்தேன்
எந்நாளும் எண்ணி வந்தேன்
எண்ணிவந்த எண்ணமெல்லாம்
எண்ணம்போல் உயர்ந்ததம்மா…
இதழொன்றை இல்லையென்று
ஏங்கிநின்ற வேளையிலே
இணையதளம் ஒன்று
தொடர்ந்தார் பாஸ்கர் அன்று
அக்கினிக்குஞ்சு என்று
அழகான பெயரும் வைத்தார்
அக்கினிக்குஞ்சு என்று
அழகான பெயரும் வைத்தார்
எக்காலும் துணை நின்றார்
தக்கவராய் அவரிருந்தார்
எண்ணிவந்தேன் எண்ணிவந்தேன்
எந்நாளும் எண்ணி வந்தேன்
எண்ணிவந்த எண்ணமெல்லாம்
எண்ணம்போல் உய்ந்ததம்மா……
கவிதையிலே குறையில்லல
கதையிலுமே குறைவுமில்லை
கவிதையிலே குறையில்லல
கதையிலுமே குறைவுமில்லை
கட்டுரையும் வற்றவில்லை
அரசியலும் பஞ்சமில்லை
கட்டுரையும் வற்றவில்லை
அரசியலும் பஞ்சமில்லை
ஆக்கங்கள் எதுவுமின்றி
என்றுமது இருந்ததில்லை
நீக்கமற நிறைந்ததினால்
நினைவினிலே நிற்கிறதே
எண்ணிவந்தேன் எண்ணிவந்தேன்
எந்நாளும் எண்ணி வந்தேன்
எண்ணிவந்த எண்ணமெல்லாம்
எண்டம்போல் உயர்ந்ததம்மா…
பதினாறாம் ஆண்டினிலே
பார்போற்றி நிற்கையிலே
இனிமேலும் சிறந்திடுமே
எந்நாளும் உயர்ந்திடுமே
பதினாறாம் ஆண்டினிலே
பார்போற்றி நிற்கையிலே
இனிமேலும் சிறந்திடுமே
எந்நாளும் உயர்ந்திடுமே
வருகின்ற ஆண்டுகளில்
வளம்கூடி திகழ்ந்திடுமே
வருகின்ற ஆண்டுகளில்
வளம்கூடி திகழ்ந்திடுமே
எல்லோரும் வடம்பிடிக்க
எல்லாமும் நிறைந்திடுமே
எல்லோரும் வடம்பிடிக்க
எல்லாமும் நிறைந்திடுமே
எண்ணிவந்தேன் எண்ணிவந்தேன்
எந்நாளும் எண்ணி வந்தேன்
எண்ணிவந்த எண்ணமெல்லாம்
இமயமாய் உயருதம்மா…
எண்ணத்தைச் சொன்னவனின் வாழ்த்து மழையாக பொழியும் கவிதை.
கவிதை
பல்லாண்டு காலம் வாழ்க
பார்புகழ என்றும் வாழ்க
செழித்து நிற்கும் செந்தமிழ் போல
கொழித்திருக்கும் அதன் புகழ்போல
பல்லாண்டு காலம் வாழ்க
பார்புகழ என்றும் வாழ்க
செழித்து நிற்கும் செந்தமிழ் போல
கொழித்திருக்கும் அதன் புகழ் போல
பல்லாண்டு காலம் வாழ்க
பார்புகழ என்றும் வாழ்க
அழியாது நிற்கும் கவியாக
அழகான நல்ல கதையாக
அழியாது நிற்கும் கவியாக
அழகான நல்ல கதையாக
அருமையான கட்டுரையாக
அருமையான கட்டுரையாக
ஆண்டு பதினாறில் அக்கினிக்குஞ்சே
நீ வாழ்க..… நீ வாழ்க!
பல்லாண்டு காலம் வாழ்க
பார்புகழ என்றும் வாழ்க
செழித்து நிற்கும் செந்தமிழ் போல
கொழித்திருக்கும் அதன் புகழ்போல
பல்லாண்டு காலம் வாழ்க
பார்புகழ என்றும் வாழ்க
புலம்பெயர்ந்து மலர்ந்த மலராக
அனைவரது இணையதளமாக
புலம்பெயர்ந்து மலர்ந்த மலராக
அனைவரது இணையதளமாக
தளராது தமிழின் படைப்பாக
தளராது தமிழின் படைப்பாக
தரணி வலம்வரும் அக்கினிக்குஞ்சே
நீ வாழ்க..… நீ வாழ்க!
பல்லாண்டு காலம் வாழ்க
பார்புகழ என்றும் வாழ்க
செழித்து நிற்கும் செந்தமிழ் போல
கொழித்திருக்கும் அதன் புகழ்போல
பல்லாண்டு காலம் வாழ்க
பார்புகழ என்றும் வாழ்க
நடுநிலை காட்டும் பண்பாக
பிரிவினை அறுக்கும் வாளாக
நடுநிலை காட்டும் பண்பாக
பிரிவினை அறுக்கும் வாளாக
ஒற்றுமையில் உறவுப் பாலமாக
ஒற்றுமையில் உறவுப் பாலமாக
பதினாறாம் ஆண்டில் அக்கினிக்குஞ்சே
நீ வாழ்க….. நீ வாழ்க!
பல்லாண்டு காலம் வாழ்க
பார்புகழ என்றும் வாழ்க
செழித்து நிற்கும் செந்தமிழ் போல
கொழித்திருக்கும் அதன் புகழ்போல
பல்லாண்டு காலம் வாழ்க
பார்புகழ என்றும் வாழ்க!!

![]()