பலதும் பத்தும்

உங்கள் கன்னத்தில் குழி விழுவது அதிர்ஷ்டமா?

சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி ஒவ்வொருவரின் முக அமைப்பை வைத்து அவர்களின் ஆளுமையை தெரிந்து கொள்ள முடியும். அப்படி ஒருவரின் கன்னத்தில் குழி விழுவது அதிர்ஷ்டமா என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க,

ஒருவருக்கு கன்னத்தில் குழி விழுவது மிகவும் அழகாகவும், லட்சணமாகவும் இருக்கும். ஆனால் அதன் பின் இருக்கும் காரணங்கள், ஜோதிட கூறுகள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவரின் கன்னத்தில் குழி விழுவது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். அதே போல் கன்னத்தில் குழி விழுகும் பெண்களை திருமணம் செய்வதால் புகுந்த வீட்டிற்கே அதிர்ஷ்டம் பெருகும் என்று சொல்லப்படுகிறது.

விஷ்ணு புராணத்தில் கூறியுள்ளபடி கன்னத்தில் குழி இருக்கும் பெண்கள் வேடிக்கையை விரும்புபவர்களாகவும், அன்பானவர்களாகவும், கவலையற்றவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களாக இருப்பார்கள்.

கன்னத்தில் குழி விழும் பெண்கள் ஆனதனமான திருமண வாழ்க்கையை பெறுவார்கள். இவர்கள் தங்கள் கணவரிடம் அளவிற்கு அதிகமான காதலும், மதிப்பும் கொண்டிருப்பார்கள். இதனால் இவர்களின் திருமண வாழ்க்கை நெருக்கமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.

கன்னத்தில் குழி விழுவது அவர்களுக்கு சுக்கிரனின் அனுகிரகம் அதிகமாக கிடைப்பதற்கான அடையாளம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனால் இவர்களின் வாழ்க்கையில் பணக்கஷ்டம் என்பது ஏற்பட வாய்ப்புகள் மிகக்குறைவு ஆகும். இது அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதி செய்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button