குக்கீஸ் என்றால் என்ன?

நாம் இணையத்தைப் பயன்படுத்தும்போது சில சமயங்களில் Accepted All Cookies அல்லது Reject All Cookies என்று வரும்.
பொதுவாக குக்கீகள் இணையத்தில் நம் தேடல்களை எளிதாக்குகின்றன.
குக்கீகள், வலைத்தளங்கள் செயல்படவும் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தவும் உதவுகின்றன.
இன்டர்நெட் குக்கீஸானது, நீங்கள் வலைத்தளத்தை திறக்கும்போது உங்கள் தொலைபேசி அல்லது கணினியில் சேமிக்கப்படும் சிறிய கோப்புகள் ஆகும்.
உங்களுக்கு விருப்பமான மொழியை தெரிவு செய்வது போன்ற செயல்பாடுகளை இந்த கோப்புகள் நினைவில் கொள்கின்றன.
இந்த குக்கீஸ் நான்கு வகைப்படும்.
முதலாவது அத்தியாவசிய குக்கீஸ் இது வலைத்தளம் செயல்பட உதவும். இரண்டாவது செட்டிங்ஸ் குக்கீஸ் இது இண்டாவது மொழி மற்றும் இருப்பிடம் போன்ற விபரங்களை நினைவில் வைத்திருக்கும். மூன்றாவது டேட்டா குக்கீஸ் இது உங்கள் செயல்பாட்டை கண்காணிக்கும். நான்காவது, தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களைக் காட்டும் விளம்பர குக்கீகள்.
இதில் Accepted All Cookies என்பதை தெரிவு செய்யும்போது வலைத்தளத்தின் சிறந்த அனுபவம் கிடைக்கும். ஆனால், உங்கள் ஒன்லைன் செயல்பாடுகளை நிறுவனங்கள் கவனிக்கும். இதுவே Reject All Cookies என்பதை தெரிவு செய்யும்போது உங்கள் தனியுரிமை பாதுகாக்கப்படும். ஆனால், வலைத்தளத்தில் சிறந்த அநுபவத்தை பெற முடியாது.
![]()