இணையத்தள இதழியல் வரலாற்றில் அக்கினிக் குஞ்சு மின்னிதழ்… சி. குருபரன் (மட்டக்களப்பு) வாழ்த்துச் செய்தி

சின்னத்தம்பி குருபரன், மட்டக்களப்பு, இலங்கை.
இலங்கைத் தமிழர்கள் 1980 களின் பின்னரும் குறிப்பாக உள்நாட்டு யுத்தம காரணமாகவும் வடக்கு, கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களில் இலட்சக் கணக்கானோர் உள்நாட்டுக்குள்ளே இடம்பெயர்ந்து பின்னர் உலகின் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகள், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழ்கின்றனர்.
அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் ஆரம்ப காலத்தில் பல துன்ப, தயரங்களை அனுபவித்து, இன்று சந்தோசமாக நிலையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
புலம்பெயர்ந்த நாடுகளில் மொழி கற்று, கல்வி கற்று இன்று அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், விஞ்ஞானம், கைத்தொழில், தொழினுட்பம், தகவல் தொழினுட்பம் சார்ந்த துறைகளிலும் தடம் பதித்து, அச்சு மற்றும் இலத்திரனில் ஊடகத் துறையிலும், வானோலி, தொலைக்காட்சிச் சேவைகளையும் நடாத்தி இலங்கைத் தமிழர்களின் புகழை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் அக்கினிக் குஞ்சு இணையத்தள மின்னிதழ் சர்வதேசத் தரம் வாய்ந்ததாக வெளிவந்து கொண்டிருப்பது பெருமை சேர்க்கிறது. இவ்விதழ் இவ்வருடம் (06.06.2026) பதினாறாவது ஆண்டு விழாவினை மாபெரும் இசை நிகழ்ச்சியுடன் கொண்டாடுவதையிட்டுப் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
பீனிக்ஸ் பறவை தீயில் இட்டு எரித்தாலும் எழுந்து வருவது போல் அக்கினிக் குஞ்சு இணையத்தள மின்னிதழும் எத்தகைய தடை நேர்ந்தாலும் எழுந்து, தலை நிமிர்ந்து தன்பணியைத் தொடரும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. நாளொரு மெனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருக்கும்.
திரு. யாழ் பாஸ்கர் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிரும் இம்மின்னிதழ் பல்துறை சார்ந்த ஆக்கங்களைத் தாங்கிக் காத்திரமான இதழாகத் தினமும் வெறிவந்து கொண்டிருக்கிறது. இதற்குப் பல்வேறு நாடுகளிலுமுள்ள பல்துறை சார்ந்தவர்கள் ஆக்கங்களை எழுதிக் கொண்டிருக்கின்றனர். அரசியல், பொருளாதாரம், நாட்டு நடப்புக்கள், கள நிலவரங்கள், இலக்கியம், கல்வி, சமூக, சமய, பண்பாட்டு அம்சங்கள், அறிவியல், தொழினுட்பம், ஆய்வியல், கண்டுபிடிப்புக்கள் இன்னும் பல அம்சங்களுடன் பல்துறை சார்ந்த வகையில் தனது அகலப் பார்வையை விரித்து மின்னிதழாக வெளிவருவது பாராட்டுக்குரியது. இத்தகைய பெருமையும் புகழும்மிக்க பத்திரிகைக்கு நான் பல்துறை சார்ந்த ஆக்கங்களைத் தொடர்ந்து எழுதி வருவதையிட்டுப் பெருமையடைகிறேன்.
பதினைந்து அண்டுகளை நிறைவு செய்து பதினாறாவது ஆண்டில் தடம்பதிக்கும் அக்கினிக் குஞ்சு இயைத்தள மின்னிதழ் மேலும் மேலும் வளர வேண்டும், மேலும் பல்துறைசார்ந்த எழுத்தாளர்களையும் உள்வாங்கிப் பரந்த கண்ணோட்டத்துடன் வெளிவர வேண்டும். அதற்கு இதழ் ஆசிரிய பீடத்துடன் இணைந்து பணியாற்றச் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த எழுத்தாளர்கள் முன்வர வேண்டும். அதற்குச் சகல ஆசிகளும் கிடைக்க வேண்டுமென வாழ்த்துகின்றேன்.

![]()