பலதும் பத்தும்
யாழில் மரணத்திலும் இணை பிரியாத அபூர்வ சகோதரிகள்!

யாழ். மண்டைதீவு பகுதியில் இரட்டை சகோதரிகள் மரணத்திலும் இணை பிரியாது இணைந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். மண்டைதீவு-06 ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த திருமதி. சிவமணி சந்திரவதனா மரணமான செய்தி அறிந்து அதிர்ச்சியில் ஒரு சில மணி நேர இடைவெளியில் அவரது மூத்த சகோதரி திருமதி.சிவசம்பு சந்திரோதயம் மரணமாகியுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.
மரணத்திலும் இணை பிரியாத இரு சகோதரிகளினதும் பிரிவு யாழ்.மண்டைதீவுக் கிராமம் முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருவருக்கும் ஏராளமானோர் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
![]()