இலங்கை மக்களின் ஈகை மனம் குறித்து வெளியான தகவல்

இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 84 வீதமானவர்கள் கண் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தேசிய கண் மருத்துவமனையின் இயக்குநர் நிபுணர் மருத்துவர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.
தேசிய கண் வங்கி நிறுவப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவு மற்றும் உலக தலசீமியா தினம் என்பனவற்றை முன்னிட்டு சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தேசிய கண் மருத்துவமனை, கண்டி தேசிய மருத்துவமனை, கராபிட்டிய போதனா மருத்துவமனை, அனுராதபுரும் போதனா மருத்துவமனை மற்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை என்பனவற்றில் கண் கருவிழி (Cornea) மாற்று அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வசதியை நாட்டின் பிற மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கண் வங்கி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 17,000-க்கும் அதிகமான கண் கருவிழிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சுமார் 12,000 கருவிழிகள் வெற்றிகரமாக நோயாளிகளுக்கு மாற்று அறுவைச் சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாடுகளிலிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் சுமார் 4,000 முதல் 4,500 வரையிலான கருவிழிகள் பிற நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![]()