லண்டனில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!

லண்டனில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் வீரகாவியமான 24 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு லண்டன் ஒக்ஸ்போர்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.
தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாவீரர்களின் தியாகங்கள்
இதனடிப்படையில் குறித்த நிகழ்வில், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்நிகழ்வில் மாவீரர்களின் தியாகங்கள் குறித்தும் மற்றும் விடுதலை இலட்சியத்தின் உறுதி குறித்தும் சிறப்புரைகள் ஆற்றப்பட்டுள்ளன.

நிகழ்வின் இறுதியாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் துயிலுமில்லப் பகுதிக்கு அணிவகுப்பாகக் கொண்டு செல்லப்பட்டு நினைவு நடுகற்களில் நிலைநிறுத்தப்பட்டன.
இதையடுத்து உறுதி ஏற்புடன் பேழையில் வைக்கப்பட்ட தேசியக்கொடியும் மாவீரர் படங்களும் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.





![]()