பலதும் பத்தும்

47 ஆண்டுகளாக நடைபெறும் தவளை தாண்டுதல் போட்டி! எங்கே தெரியுமா?

பொதுவாகவே சில நாடுகளில் பின்பற்றப்படும் கலாசாரங்கள், மற்றும் பாரம்பரிய போட்டி நிகழ்வுகள் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும்.

அந்தவையில், 46 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புகழ்பெற்ற தவளை தாண்டுதல் போட்டி, ஐரோப்பிய நாடான குரோஷியாவில் (Croatia) உள்ள லோக்வே (Lokve) என்ற நகரத்தில் 47 ஆவது ஆண்டாக  இந்த  ஆண்டும் நடைபெற்றுள்ளது.

47 ஆண்டுகளாக நடைபெறும் தவளை தாண்டுதல் போட்டி! எங்கே தெரியுமா? | Frog Jamping Celebration At Croatian

ஆண்டுதோறும் நடைபெறும் “தவளை இரவு” (Frog Night) நிகழ்ச்சியில் இந்த தவளை தாண்டுதல் போட்டி நடைப்பெற்று வருகின்றது.

குறித்த வினோதப் போட்டியில் நூற்றுக்கணக்கான தவளைகள் களமிறங்கின இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற தவளை, ஒரே தாவலில் ஒரு மீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து சாதனை படைத்ததுள்ளது.

மேலும் சில தவளைகள் சில சென்டிமீட்டர்கள் மட்டுமே தாண்டி ரசிகர்களைச் சிரிப்பழலயில் ஆழ்த்தின்.

குறித்த போட்டியில் காட்டில் இருந்து பிடிக்கப்பட்ட ஒரு தவளையை விழா அமைப்பாளர்களிடம் இருந்து போட்டியாளர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

47 ஆண்டுகளாக நடைபெறும் தவளை தாண்டுதல் போட்டி! எங்கே தெரியுமா? | Frog Jamping Celebration At Croatian

அந்த தவளைகள் போட்டி முடிந்தவுற்றதன் பின்னர் மீண்டும் பாதுகாப்பாக குளம் குட்டைகளில் விடப்படுகின்றன.

47 ஆண்டுகளாக நடைபெறும் தவளை தாண்டுதல் போட்டி! எங்கே தெரியுமா? | Frog Jamping Celebration At Croatian

இந்த போட்டியின் போது தவளைகளைத் தொடாமல், சத்தம் எழுப்பியோ, லேசாகக் காற்று ஊதியோ அல்லது மேசையைத் தட்டியோ அவற்றைத் தாவ வைக்க வேண்டும்.அவை தாண்டும் தூரத்தை வைத்து வெற்றியாளர் தீர்மானிக்கப்படுகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button