பலதும் பத்தும்

” காங்கேசன்துறை வரவேற்கிறது” வளைவினை அமைக்க தீர்மானம்

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் காங்கேசன்துறை பகுதியில் ” காங்கேசன்துறை வரவேற்கிறது” எனும் வரவேற்பு வளைவினை அமைப்பது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் சபையில் முன் மொழிந்த தீர்மானம் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக காங்கேசன்துறை பகுதியில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , காங்கேசன்துறையை பிரதிபலிக்கும் வகையில் காங்கேசன்துறை எல்லையில் “காங்கேசன்துறை வரவேற்கிறது” என வரவேற்பு வளைவினை அமைக்க வேண்டும் என தீர்மானம் ஒன்றினை உறுப்பினர் சீத்தா முன் மொழிந்த நிலையில் சபையில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை வலி. வடக்கு பிரதேச சபை ஆளுகைக்குள் இருந்து ஆரம்பிக்கும் வழுக்கையாறு தொடர்பிலும் , வழுக்கையாறு தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டும் வகையிலும் , வழுக்கையாறு செல்லும் பாதைகளில் விழிப்புணர்வு பதாகைகளை காட்சிப்படுத்துவது தொடர்பில் உறுப்பினர் சீத்தா தீர்மானத்தை முன் மொழிந்த நிலையில் , அதுவும் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு , தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button