பலதும் பத்தும்

ஏலத்துக்கு வரும் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள்.. ஆரம்ப விலையே இவ்வளவா!

பாப் இசை மன்னனான திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள் வரும் ஜூன் 3 ஆம் திகதியன்று பாரிஸில் ஏலத்துக்கு வரவுள்ளது.

மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய கையுறை, தொப்பி, ஆடை உள்ளிட்ட பொருட்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், பிரான்ஸில் ஜூன் 3 ஆம் திகதி மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பெரும்பாலான பொருட்கள் ஒரே இடத்தில் ஏல விற்பனை செய்யப்படவுள்ளது.

குறிப்பாக, BAD சுற்றுப்பயணத்தில் BILLIE JEAN பாடல் பாடிய போது மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த கையுறையின் ஆரம்ப விலை சுமார் 2 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 1984 ஆம் ஆண்டு VICTORY சுற்றுப்பயணத்தின் போது மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த தொப்பியும் பெரும் விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலம் விடப்படுவதற்கு முன்பு, மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள் பாரிஸில் உள்ள அருங்காட்சியகத்தில் 2 நாட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவான மைக்கேல் படம் உலகம் முழுவதும் நேற்றைய தினம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *