பலதும் பத்தும்

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

தொன்று தொட்டு மரப்புகளைப்பேணிப் பாதுகாப்பதை தமிழினம் இன்றும் கைக்கொண்டு வருகின்றது என்பதைப் பறைசாற்றும் முகமாக சித்திரை வருடப்பிறப்பின் பின்னர் போர் தேங்காய் அடிக்கும் பாராம்பரிய நிகழ்வு பன்நெடுங் காலமாக மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கிராமத்தில் இருந்து வருகின்றது.

அதற்கிணங்க இவ்வருடமும் சித்திரை வருடப்பிறப்பின் பின்னர் கோட்டைக் கல்லாறு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டிருந்த போர்த்தேங்காய் அடிக்கும் நிகழ்வு  நிறைவு பெற்றிருந்தது.

இப்போர்தேங்காய் அடிக்கும் நிகழ்வு தங்களுடைய மூதாதையர் காலத்திலிருந்து தொன்று தொட்டு இற்றைவரையில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு மிக நீண்ட வரலாறும் உண்டு எனவும் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடசேரி, தென் சேரி என இரு பிரிவுககளாக பிரித்து, முதலாவதாக தென்சேரியைச் சேர்ந்த நபர் வடசேரிப்பக்கமாக தேங்iகாய் ஒன்றை வீசுவார் அப்போது வடசேரியைச் சேர்ந்தவர் அவரது கையில் வைத்திருக்கும் தேங்காயால் வீசி வருகின்ற தேங்iகாய்க்கு அடிப்பார்.

அதில் இரண்டு தேங்காய்களும், உடைந்துவிடும், அல்லது ஏதாவது ஒன்று மாத்திரம் உடையும், அல்லது இரண்டும் உடைபடாமலும் போகும். இவ்வாறு மாற்றி மாறி தேங்காய்கள் வீசப்படும். இறுதியில் எந்தச் சேரிப்பக்கம் தேங்கய்கள் மீதமுள்ளதோ அப்பக்கமே வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.

சுமார் ஒரு வாரகாலமக இது கோட்டைக்கல்லாது கண்ணகையம்மன் ஆலய முன்றலில்  நடைபெறும். இறுதியில் தென்சேரி வாரத்திற்கு அதவது கண்ணகி அம்மன் பக்கம் வெற்றி பெற்றதும் வருடத்திற்கான தேங்காய் அடிக்கும் நிகழ்வு முடிவுறுத்தப்படும். இதுவே இற்றை வரையில் வறக்கமாக அந்த மக்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *