பலதும் பத்தும்

மாத்திரைகளின் நடுவே இருக்கும் கோடு எதற்காக?

நாம் பயன்படுத்தும் மாத்திரைகளில் நடுவே இருக்கும் கோடு எதற்காக என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் உடல் தொந்தரவு காரணமாக சில மாத்திரைகளை எடுத்து வருகின்றனர்.

முன்னோர்களின் காலத்தில் மாத்திரை சாப்பிடுவது மிகவும் அரிதாக காணப்பட்டது. ஆனால் தற்போதோ சின்ன சின்ன உடல்நல பிரச்சனையாக இருந்தாலும் சட்டென மாத்திரையை வாங்கி சாப்பிடுகின்றனர்.

உடனடியான நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதே பலரது சிந்தனையாக இருந்து வருகின்றது. நாம் உண்ணும் மாத்திரைகள் பல வடிவங்களில் கிடைக்கின்றது.

அவ்வாறு கிடைக்கும் மாத்திரைகளுக்கு மத்தியில் இருக்கும் கோட்டையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். இவை எதற்காக என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம்.

மருத்துவ ரீதியாக, ஒரு மாத்திரையில் உள்ள கோடு ‘ஸ்கோர் லைன்’ என்று அழைக்கப்படுகிறது, இதற்கு சில காரணங்களும் இருக்கின்றது.

அதாவது சரியான முறையில் மாத்திரையை உட்கொள்வதற்கு இந்த கோடு உதவுவதாகவும், நோயாளிகள் மருந்தின் அளவை சரியாக எடுத்துக் கொள்ளவும், சமமாகவும் உடைக்கவும் உதவுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சில மாத்திரையில் இந்த கோடு உற்பத்தி செயல்முறையின் விளைவாகவோ அல்லது அடையாள நோக்கத்திற்காகவே போடப்பட்டிருப்பதாகவும், சில மாத்திரைகளில் இந்த கோடு இருப்பதில்லை.

அவ்வாறு கோடு இல்லாத மாத்திரையை நாம் உடைத்து சாப்பிடுவது கூடாது. ஏனெனில் அவற்றின் செயல்திறனை மாற்றக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி பக்கவிளைவுகளின் அபாயத்தையும் அதிகரிக்கலாம். ஆகவே கோடு இருந்து, பயன்பாட்டுக் குறிப்பில் உடைப்பதற்கு அனுமதிக்கப்பட்டால் மட்டுமே இரண்டாக உடைத்து மாத்திரையை உட்கொள்ள வேண்டும். சந்தேகம் என்றால் மருத்துவர் அல்லது மருந்தாளர்களிடம் கலந்தாலோசிப்பது சிறந்தது.

ஆகவே மாத்திரையின் நடுவே இருக்கும் கோடு வடிவமைப்பு அம்சத்திற்காக மட்டுமின்றி பயனுள்ள சிறப்பம்சம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *