பலதும் பத்தும்

குளிக்கும் நீரில் இந்த 5 பொருட்கள் சேர்த்தால் கண் திருஷ்டி விலகுமாம்

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் வெளியே சென்று வீடு திரும்பும் பொழுது நம்மை அறியாமல் நம் மீது நிறைய நபர்களின் கண்திருஷ்டி ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும், வேலை காரணமாக உடல் சோர்வு மனசோர்வு உண்டாகும். இவையெல்லாம் நீங்க நாம் குளிக்கும் நீரில் தினமும் ஐந்து பொருட்களை சேர்த்துக் குளித்தால் நிச்சயம் மனமும் வாழ்க்கையும் மாறும். அதைப் பற்றி பார்ப்போம்.

1. நாம் குளிக்கும் நீரில் கல் உப்பு சேர்த்து குளித்தால் உடலை சுற்றி உள்ள எதிர்மறை ஆற்றல் விலகி மனம் லேசாகும். அதோடு உடல் சோர்வு நீங்கும். அறிவியல் ரீதியாகவும் உப்பு கலந்த வெந்நீர் நம்முடைய உடலுக்கு நல்ல ஓய்வை தரக்கூடியதாக இருக்கிறது. ஆதலால் வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை இதை பின்பற்றினால் நல்ல மாற்றம் உண்டாகும்.

2. வியாழக்கிழமைகளில் குளிக்கும் நீரல் சிறிது மஞ்சள் கலந்து குளிக்கும் பொழுது நம்முடைய சருமத்தை அவை பாதுகாப்பதோடு இயற்கை கிருமி நாசினியாகவும் உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியதாகவும் செயல்படுகிறது. இது பாரம்பரிய முறைகளின் படி இவ்வாறு குளிப்பதனால் திருமண தடைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

4. திங்கட்கிழமை அன்று குளிக்கும் நீரிலே பால் கலந்து குளித்தால் நம்முடைய மன அழுத்தம் குறைந்து உடல் குளிர்ச்சி அடைந்து சருமமும் மென்மையாகும். இது ஆன்மீக சின்னமாகவும் கருதப்படுகிறது. இவை நம்முடைய ஆன்மா அமைதி நிலையை பெறுகிறது.

5. குளிக்கும் நீரிலே குங்கும பூ சேர்த்து குளிப்பதால் உடலும் மனதும் புத்துணர்ச்சி அடைகிறது. அதோடு பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையில் இவை நமக்கு வசிய தன்மை மற்றும் கவர்ச்சியை அதிகரிக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *