பலதும் பத்தும்

இலங்கை வந்த பாய்மரக் கப்பல்!

இந்தோனேசியக் கடற்படைக்குச் சொந்தமான ‘KRI BIMA SUCI – 945’ எனும் பாய்மரக் கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (15) நாட்டை வந்தடைந்துள்ளது.

‘ASEAN Plus Cadet Sail (APCS) – 2026’ திட்டத்தின் கீழ், இந்தோனேசியக் கடற்படையின் மாணவ அதிகாரிகள் உட்பட 26 வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ அதிகாரிகளுடன் இக்கப்பல் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய உற்சாகமாக வரவேற்றனர்.

‘SAIL SHIP’ வகையைச் சேர்ந்த இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் சுகெங் ஹரியான்டோ செயற்படுகின்றார்.

இக்கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகள் உள்ளிட்ட கடற்படையினர் இக்கப்பலைப் பார்வையிட உள்ளனர். அத்துடன், இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளதுடன், நாட்டின் முக்கிய இடங்களைப் பார்வையிடுவதற்காகப் பல பகுதிகளுக்குச் சுற்றுலா மேற்கொள்ளவும் இக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *