பலதும் பத்தும்

வடக்கில் அதிக சனத்தொகை கொண்ட கிராம அலுவலர் பிரிவுகள் வவுனியா மாவட்டத்திலேயே!

வட மாகாணத்தில் உள்ள கிராம அலுவலர் (GN) பிரிவுகளின் சனத்தொகை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தரவு ஆய்வில், அதிக சனத்தொகை கொண்ட முதல் பத்து இடங்களில் ஒன்பது இடங்களை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளே பிடித்துள்ளன.

வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, வவுனியா மாவட்டத்தின் தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவு 6,874மக்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பட்டாணிச்சி புளியங்குளம் (6,580) மற்றும் மகாறம்பைக்குளம் (6,463) ஆகிய பிரிவுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

முதல் 10 இடங்களில் 9 இடங்கள் வவுனியா மாவட்டத்திற்கே கிடைத்துள்ளன. இதில் வவுனியா ஔ மற்றும் வெண்கலச்செட்டிக்குளம் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகள் உள்ளடங்குகின்றன.

வவுனியா மாவட்டத்திற்கு வெளியே, கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புதிய புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவு 6,144 மக்களுடன் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தத் தரவுகளின் படி, வட மாகாணத்தின் அதிக சனத்தொகை அடர்த்தி கொண்ட கிராமங்களாக வவுனியா நகரத்தை சூழவுள்ள பகுதிகளே காணப்படுகின்றன.

குறிப்பாக, முதல் மூன்று இடங்களையும் வவுனியா பிரதேச செயலர் பிரிவே தன்வசம் வைத்துள்ளது. வவுனியா மாவட்டத்திற்கு வெளியே கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பிரிவு மாத்திரமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சனத்தொகை அதிகரிப்பானது, அப்பகுதிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரச சேவைகளின் தேவையை மேலும் வலியுறுத்துவதாக அமைகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *