பலதும் பத்தும்

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் தொடர்ந்து 1 மணிநேரம் நடன ஆற்றுகை நிகழ்த்திய மாணவி

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் பரதநாட்டிய நடன ஆற்றுகை நிகழ்த்திய மாணவி செல்வி அபிஷாய் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிகழ்வு  (12) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றது.

ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூயில் தரம் 7இல் கல்வி கற்கும் செல்வி அபிஷாய் சக்தீபன் என்ற மாணவியே இந்த நடன ஆற்றுகைகளை நிகழ்த்தியுள்ளார்.

இதன்போது பரத நாட்டிய உருப்படிகளான புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம், கௌத்துவம், சப்தம், வர்ணம், பதம், கீர்த்தனை, தில்லானா, மங்களம் போன்ற நடன ஆற்றுகைகளை மாணவி நிகழ்த்தியுள்ளார்.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்து கொண்டு குறித்த மாணவியை பாராட்டி கௌரவித்துள்ளார்.

மேலும்  இம் மாணவியின் திறமைக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button