இந்தியா

தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அவசர அறிவிப்பு; பரபரக்கும் தமிழகம்!

வரும் 23 ஆம் திக தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தனது கட்சித் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் முக்கிய வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் தவெக தலைவர் விஜய், தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அடுத்த பத்து நாட்களுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தொண்டர்கள் தீவிரமாகக் களப்பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அவசர அறிவிப்பு; பரபரக்கும் தமிழகம்! | Tvk Leader Vijay Appeal To Cadres Election

குறிப்பாக, மக்கள் வசிக்கும் இடங்களுக்கே நேரடியாகச் சென்று, வீடு வீடாகச் சந்தித்து கட்சியின் கொள்கைகளை விளக்கிக் கூறி வாக்குச் சேகரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தமது கட்சி வேட்பாளர்களுக்கு ‘விசில்’ சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் கோருமாறும், தேர்தல் பணியில் ஈடுபடும் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, ஒரு மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல்” என்று குறிப்பிட்டுள்ள விஜய், உண்மையான மக்களாட்சியை அமைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Loading

One Comment

  1. தவெக தேர்தல் பணி சரியாக செல்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த கட்சியில் சரியான நிர்வாகிகள் இல்லை செங்கோட்டையனை தவிர. செங்கோட்டையன் சொல்கிறப்படி பிரச்சாரம் செய்தால், கட்சி தோற்றாலும் சில இடங்களை கைப்பற்றமுடியும். ஜெயலலிதா அவர்களுக்கே வியூகத்தை அமைத்து கொடுத்தவர். இப்போதாவது விஜய் டெங்கோட்டையன் பேச்சை கேட்டு செயல்பட்டால் நான் சொன்னதுபோல் சில இடங்களில் வெற்றி பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *