விந்தை என்னென்பேன் வேல்விழி மாதே!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

குன்றிலிட்ட விளக்காய் இருக்க
அனைவருக்கும் ஆசைதான்
குடத்திலிட்ட விளக்காய் இருக்க
அனைவராலும் முடியும்
குன்றிலிட்ட விளக்கு அனைந்துவிடும்
எதிர் கொள்ளும் பிரச்சனை ஆயிரம்
காற்று மழை எனப் போராட்டம்
போராட்டம் தாண்டியும் பிழைத்திருக்க
தீப்பந்தமாய் திறமை வேண்டும்
விளக்காய் நின்று வெளிச்சம் தந்தால்
கொஞ்சகாலமே ஆயுள் குறைந்து நிற்கும்
குடத்தில் இட்ட விளக்கு
வெளிச்சம் தராது அதற்கென்றும்
ஆபத்தொன்றும் எந்நாளும் வராது
காற்று மழையெனக் கவலையில்லை
ஒன்னைப் பெற்றால் மற்றொன்றில்லை
போட்டி இல்லையெனில் போராட்டமில்லை
குடத்து விளக்கை எதுவும் பாதிப்பதில்லை
புகழ் ஒன்றும் கிள்ளுக் கீரையல்ல
திறமை கொண்டு பெறும் கொம்புத் தேனது
ஆதலின் ஒன்றை அறிவீர் மாந்தரே
எல்லோராலும் குன்றிலிட்ட விளக்காய்
ஆவதென்பதை சாத்தியமாக்கிட
இங்கே விளக்கென்பது வெளிச்சமாய்
தீப்பந்தமாய் மாறி நிற்க வேண்டும்
காற்று மழையைக் கடப்பதைப் போல்
களப்பிரச்சனை காணும் ஆற்றல் வேண்டும்
குடத்தில் உண்டு பாதுகாப்பும்
போராடவில்லை எனில் புகழில்லை
துரும்பைக் கூட கிள்ளிப் போடாது
புகழ் எங்ஙனம் கிட்டும் மானிடரே
ஏதே நானும் செய்கிறேன் என்று
ஒரு செயல் செய்து புகழ்நோக்கின்
பாலைவனத்ததே வித்தை விதைத்து
பக்குவமாய் அறுவடைக்கு
காத்திருத்தல் என்பர் அது பிழையோ
எளிதில் கிடைப்பது எதுவும் நிலையில்லை
நிலையாமையே இங்கு நிரந்தரமாயிருக்க
நிலயற்ற புகழைம் நிரந்தரமோ
நிலையற்ற புகழாகவே அது இருந்திடினும்
நினைத்ததும் அடைந்திட இயன்றிடுமோ
இத்தனை சூட்சுமங்கள் இதிலிருக்க
அறிந்தவனும் புகழுக்காய் ஓடுகிறான்
அரிச்சுவடி அறியாதவனும் ஓடுகிறான்
விந்தை என் சொல்வேன் வேல்விழி மாதே!

![]()