பலதும் பத்தும்

விஜய் எனக்கு பிடித்த நடிகர் ஆனால்; நாமல் கொடுத்த அறிவுரை

தென்னிந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்றும், தான் அவருடைய ரசிகர்களில் ஒருவன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் பொது உரையாடல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நாமல்,

விஜய் சிறந்த நடிகர், ஆனால் நடிப்பு என்பது வேறு, அரசியல் என்பது முற்றிலும் வேறு என்பதை அவர் உணர வேண்டும் என்று கூறினார். சினிமாவில் நடிப்பது போல் அல்லாமல், அரசியலில் அவர் ஒரு நிஜக்காலத் திரைக்கதையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார் .

அதேநேரம், கச்சத்தீவை இந்தியா மீட்டெடுக்க வேண்டும் என்ற விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்துக் கேட்கப்பட்ட போது, 1974 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு பகுதி என்று நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மாநில அரசுகளால் அல்லாமல், மத்திய அரசுகளுக்கு இடையிலேயே தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *