84 கடற்படையினரின் உடல்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படையுங்கள்; காலி நீதிவான் உத்தரவு

காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் 84 ஈரான் கடற்படையினரின் உடல்களை , ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட நேற்று புதன்கிழமை காலி தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் வைத்து ஈரான் கடற்படைக்கப்பலான ‘ஐரிஸ் டெனா’ மீது அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 84 கடற்படையினரின் உடல்கள் இலங்கையினால் மீட்கப்பட்டு காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன .
இந்நிலையில் இந்த கடற்படையினரின் உடல்களை விரைவில் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் காலி துறைமுகப் பொலிஸாரால் காலி பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் 84 ஈரானிய கடற்படையினரின் உடல்களை , ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
![]()